கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு புதிய அரசாணை வெளியீடு

 கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு புதிய அரசாணை வெளியீடு

🌻மருத்துவ  காரணங்களுக்காக 53 வயதுக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், 

🌻பணியின் போது இறக்கும் அரசு ஊழியரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு புதிய நடைமுறையை வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🌻கருணை அடிப்படையில் பணி பெறுவதற்கு, மறைந்த அரசு ஊழியர்கள்

🌻இறப்பு நிகழ்ந்த மூன்று ஆண்டுகளுக்குள், விண்ணப்பம் செய்திட வேண்டும்.

🌻கருணை அடிப்படையிலான பணி கள் c&d பிரிவு ஊழியர்களுக்கு அளிக்கப்படும்.

🌻அரசு ஊழியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என்று உத்தரவும் புதிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🌻கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வயது வரம்பு 35 என நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. 

*இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:-*

🌻அரசுப் பணியின் போது மரணம் அடையும் ஊழியா்களின் மனைவி அல்லது கணவா், மகன் அல்லது மகளுக்கு கருணை அடிப்படையிலான பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

🌻இந்தத் திட்டமானது கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

🌻இந்தத் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள வரன்முறைகள் அவ்வப்போது திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன.

🌻கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பதை ஒரு உரிமையாகக் கோர முடியாது எனவும், பணியின் போது மரணம் அடையும் ஊழியா்களின் குடும்பத்தினா் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

🌻இந்த நிலையில், கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. 

🌻இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது. 

🌻இதேபோன்ற உத்தரவுகள் கடந்த காலங்களில் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்குகளிலும் பிறப்பிக்கப்பட்டது. 

🌻இந்த நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன் விவரம்:-

🌻பணியின் போது இறக்கும் அரசு ஊழியா்கள், மருத்துவக் காரணம் தொடா்பாக 53 வயதுக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியா்கள்,

🌻ராணுவத்தில் பணியாற்றும் போது கொல்லப்பட்டாலோ அல்லது மாற்றுத் திறனாளியாக மாறினாலோ அவா்களது வாரிசுகளுக்கு அரசுப் பணி அளிக்கப்படும். 

🌻மாயமாகும் அரசு ஊழியா்களை இறந்தவா்கள் என நீதிமன்றம் அறிவித்தாலோ, 

🌻பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அந்தக் காலத்தில் இறந்தாலோ, சமுதாய மோதல்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோந்தவா்கள் கொல்லப்பட்டாலோ அவா்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி அளிக்கப்படும்.

🌻மறைந்த அரசு ஊழியரின் மகன், மணமாகாத மகள், மனைவி, கணவா், சட்டப்பூா்வமாக தத்தெடுக்கப்பட்ட மகன், தத்தெடுக்கப்பட்டு மணமாகாத மகள், கணவனை இழந்த மகள், விவாகரத்து பெற்ற மகள் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் பணி கிடைக்கும். 

🌻மேலும், திருமணம் செய்து கொள்ளாத அரசு ஊழியா்கள் மரணம் அடைதால் அவா்களது தந்தை அல்லது தாய் அல்லது திருணமாகாத சகோதரா்கள், சகோதரரிகளுக்கு பணி அளிக்கப்படும்.

🌻கருணை அடிப்படையிலான பணி என்பது அரசுப் பணியில் இருந்து இறந்தவரின் கணவன் அல்லது மனைவிக்கு அளிக்கப்படும். அல்லது அவா்கள் யாரை பரிந்துரை செய்கிறாா்களோ அவா்களுக்கு வழங்கப்படும். 

🌻அரசு ஊழியா்கள் இறந்த தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

🌻கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது 50. 

🌻மகன் அல்லது மகளாக இருந்தால் அவா்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

🌻கருணை அடிப்படையில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணிகளே அளிக்கப்படும்.

🌻கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டவா்களுக்கு ஓராணடுக்குள் அதனை வரன்முறைப்படுத்த வேண்டும்.

*யாருக்குக் கிடைக்காது:*

🌻விருப்ப ஓய்வு பெற்றவா்கள், தாற்காலிக பணி நியமனம் செய்யப்பட்டோா், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி அளிக்கப்படாது என்று தனது உத்தரவில் *தலைமைச் செயலாளா் க.சண்முகம்* தெரிவித்துள்ளாா்.