பாலிதீன் பை ஒழிப்பு சிறப்பு கருத்தரங்கு:

 பாலிதீன் பை ஒழிப்பு சிறப்பு கருத்தரங்கு



பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவச துணிப்பை விநியோகம் :

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பாலிதீன் (நெகிழி ) பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் அவற்றை முற்றிலும் ஒழிக்கும் விதமாக தன்னார்வலர்கள், மற்றும் வியாபாரிகளை அழைத்து நெகிழியினால் ஏற்படும் தீமைகள், மற்றும் அவற்றை ஒழிப்பதற்கான வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத் தரங்கத்திற்கு பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு திட்ட அலுவலர் தியாகராஜன் முன்னிலை வகித்து விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்., சுகாதார ஆய்வாளர்கள் அசன் முஹமது, அலெக்ஸாண்டார் ஆகியோர் பொது மக்களுக்கு நெகிழியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினர். மேலும் நெகிழியை முற்றிலும் ஒழிக்கும் வண்ணம் கருத்தரங்கில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள்,வியாபாரிகள், மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக துணிப்பைகள் வழங்கினர். பாலிதீன் (நெகிழி ) பயன்பாடு ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.பெரியகுளம் வளர்ச்சிக் கழகம் (தன்னார்வலர்கள்) சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி