வாகன ஓட்டுனர்களின் மனிதாபிமானம்

 வாகன ஓட்டுனர்களின் மனிதாபிமானம்



கேரளா மாநிலம் கோட்டயம் மருத்துவமனைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மூளை சாவு அடைந்த பெண் ஒருவரை இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக கோட்டயம் கொண்டு சென்றனர்.

 டிசம்பர் - 27 காலை 6.00 மணிக்குள் கொண்டு செல்ல வேண்டிய நிலையில். டிசம்பர்-26 இரவு 10.45 மணி அளவில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து புறப்பட்ட அவசர ஊர்தி தமிழ் நாட்டை டிசம்பர் 26 இரவு கடந்து சென்றது. இந்த மருத்துவமனை மற்றும் கேரளா மாநிலம் அறுவை சிகிச்சைக்காக காத்துக் கொண்டு இருக்கும் பெற்றோர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் நிறுவன தலைவர் டாக்டர்.முத்தூராமன் சிங்க பெருமாள் அவர்கள் ஆலோசனை பெற்று அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் மாநில பொது செயலாளர் டாக்டர்.சிவசங்கரன் பாணர்.ஜீ வேண்டுகோளுக்கு இணங்க அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் மாநில தலைவர் யுவராஜ் பாலன் தலைமையில். அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் ஓட்டுநர் அணி மாநில தலைவர் இசக்கி ராஜ் துறை வழிகாட்டுதல் படி கர்நாடக தமிழக எல்லை பகுதியில் இருந்து கேரளா மாநிலம் பாலகோடு வரை எந்த விதமான அசம்பாவிதம் இல்லாமல் அவசர ஊர்தி தமிழ் நாட்டை கடந்து சென்றது. 

இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஓட்டுநர் அணிதலைவர் திரு.முருகன் அவசர ஊர்தி செல்ல வாகனம் எந்த விதமான இடையூறு இல்லாமல் சுங்கச்சாவடி மற்றும் வாகன போக்குவரத்து நெரிசலை சரிசெய்து சூளகிரி வரை உடன் இணைந்து அனுப்பி வைத்தார். சூளகிரியில் இருந்து கிருஷ்ணகிரி காவேரி பட்டணம் வரை கிருஷ்ணகிரி மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் திரு.மாரியப்பன் மற்றும் 15க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காவேரி பட்டணம் முதல் தோப்பூர் கனவாய் வரை தருமபுரி மாவட்ட தலைவர் பிரபு மற்றும் தோப்பூர் கனவாய் முதல்  சங்ககிரி வரை சேலம் மாவட்ட ஓட்டுநர் அணி தலைவர் பிரபு இணை தலைவர் இராஜ்குமார் மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மற்றும் 35க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ‌களமிறங்கி வாகனம் எந்த விதமான இடையூறு இல்லாமல் அனுப்பி வைத்தார்கள். 

தனியார் அவசர ஊர்தி 4 ஊர்தியும் அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. சங்ககிரி முதல் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் ஓட்டுநர் அணி மாநில பொருளாளர் திரு.ஆசைதம்பி மற்றும் திருப்பூர் உறுப்பினர் 7 பேர் உடன் இணைந்து அவசர ஊர்தியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். விஜயமங்கலம் முதல் கனியூர் சுங்க சாவடியில் வரையிலும் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.பிரபாகரன் மற்றும் 25 க்கு மேற்பட்ட அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் உறுப்பினர்கள்  பாதுகாப்புடன் அழைத்து சென்று அனுப்பி வைத்தார்கள். 

கனியூர் சுங்கச்சாவடியில் தயார் நிலையில் இருந்த அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் மாநில தலைவர் டாக்டர்.யுவராஜ் பாலன் மற்றும் அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் ஓட்டுநர் அணி மாநில செயலாளர் தங்கராஜ் மற்றும் ஓட்டுநர் அணி கோயம்புத்தூர் மாவட்ட செயலாளர் அழகர் சாமி, திரு சீனிவாசன்,திரு.இளங்கோ மற்றும் 250 க்கும்  மேற்பட்ட அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் உறுப்பினர்கள் வழிநெடுக இருந்து பாலக்காடு வரை சென்று அதிகாலை  2.30 மணி அளவில் அனுப்பி வைத்தார்கள். 

இந்த பயணத்தின் போது உறுதுணையாக இருந்த 500 க்கு மேற்பட்ட அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் உறுப்பினர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய,கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் அகில இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச்சங்கம் மாநில பொது செயலாளர் டாக்டர்.சிவசங்கரன் பாணர்.ஜீ நன்றி கூறினார். அண்ணா எம்.ஜீ.ஆர் திராவிட மக்கள் கழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர். முத்தூராமன் சிங்க பெருமாள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.