ஈரோடு :டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ரயில் மறியல் போராட்டம்.
டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை ம.தி மு.கவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் அவர் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும்,இந்த சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கப்படும் எனக் கூறினார். மேலும் இதைத் தொடர்ந்து இவர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றபோது ரயில் நிலையம் முன்பு காவல்துறை அவர்களை தடுத்து கைது செய்தது . இப்போராட்டத்தில் ம.தி மு.க ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் சிவில் உரிமைக் கழகம் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன .