பிரபல நடிகையுடன் சிம்புவுக்கு திருமணம்? உறுதி செய்த டி ஆர் ராஜேந்தர்

 

பிரபல நடிகையுடன் சிம்புவுக்கு திருமணம்? உறுதி செய்த டி ஆர் ராஜேந்தர்

தமிழ் சினிமாவின் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக ஒரு கலக்கு கலக்கியவர் டி ராஜேந்தர். இவரது மகன் சிலம்பரசன்.

டி ராஜேந்தர் எப்படி தமிழ் சினிமாவில் பெண்களை தொடாமல் நடித்து ஃபேமஸ் ஆனாரோ அதற்கு நேரெதிராக பெண்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை கிளப்பியவர் சிம்பு.

அதுமட்டுமில்லாமல் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் உடன் காதல் கிசுகிசுக்களில் மாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்துள்ள சிம்பு அடுத்தடுத்து ஈஸ்வரன் மற்றும் மாநாடு என ரிலீசுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடிகை திரிஷா உடன் சிம்பு மீண்டும் தன்னுடைய காதலை தொடர்ந்ததாக ஒரு வதந்தி கிளம்பிய நிலையில் டி ஆர் ராஜேந்தர் இடம் அதைப் பற்றி சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால் டிராஜேந்தர் உண்மையை ஓப்பனாக சொல்லாமல் ஈஸ்வரன் என்ற பெயரிலேயே வரன் இருப்பதால் விரைவில் நல்ல வரனாக சிம்புவுக்கு அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

அப்பவும் சிம்பு மற்றும் திரி காதல் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிடவில்லை. இதனால் பத்திரிக்கையாளர்கள் வழக்கம் போல் கண் காது மூக்கு வைத்து பேச ஆரம்பித்துவிட்டனர்