ரேஷன் பொருட்கள் ஜூலை மாதத்துக்கும் இலவசம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

ரேஷன் பொருட்கள் ஜூலை மாதத்துக்கும் இலவசம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு




கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரிகட்ட பல்வேறு சலுகைகளை அரசுகள் அறிவித்து வருகின்றன. எனினும், அது போதுமானதாக இல்லை என்ற குற்றம் சாட்டுகள் எழுந்து வருகின்றன.
 

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கான ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன் தொடர்ச்சியாக, இந்த இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் ஜூலை மாதத்திற்கும் நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான டோக்கன்கள் வருகிற 6ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்