தங்கும் இடத்துடன் இலவச கல்வி! இராமகிருஷ்ணா மிஷன் அறிவிப்பு!!

தங்கும் இடத்துடன் இலவச கல்வி! இராமகிருஷ்ணா மிஷன் அறிவிப்பு!!


ஏழை மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றுடன் கூடிய இலவச கல்வி வழங்கப்படுகிறது என இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல செயலாளர் சுவாமி சத்யஞானானந்தர் தெரிவித்துள்ளார்.


விண்ணப்பம்:
சென்னை மைலாப்பூர் இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல செயலாளர் சுவாமி சத்யஞானானந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :-


கடந்த 115 ஆண்டுகளாக கல்வி சேவையில் உள்ள எங்கள் மாணவர் இல்லத்தில் தாய்−தந்தை இருவரில் யாரேனும் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடத்துடன் கூடிய இலவச கல்வி அளிக்கப்படுகிறது. 
5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 6ம் வகுப்பிலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டிலும், +2 தேறிய மாணவர்கள் பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டிலும் சேர தகுதியான மாணவர்களிடம் இருந்தது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வேலைவாய்ப்பு :


பாலிடெக்னிக் கல்லூரியில் Automobile, Mechanical, Computer Engineering பிரிவுகள் உள்ளன. படித்து முடித்த மாணவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். இணையதள முகவரி (URL)http://sites.google.com/view/rkmshome-admissions-2020 வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், 
66, P.S.சிவசாமி சாலை, மைலாப்பூர், 
சென்னை−600004


என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


அல்லது நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.


கூடுதல் விபரங்களுக்கு 044−24990264, 044−24992537 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் மற்றும் www.rkmshome.org என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்