நாளை முதல் ஊரடங்கு கிடையாது. முதலமைச்சா் அதிரடி உத்தரவு....!
பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க நாளை முதல் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அந்த மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த பெரு நகரம் என்ற பெருமையை பெங்களூரு வைத்திருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக இங்கு தினமும் சுமார் 2 ஆயிரம் என்ற அளவுக்கு புதிதாக கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாக தொடங்கினர்.
புதிய மருத்துவ கட்டமைப்பு சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் கர்நாடக அரசு எடுக்கவில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து கடந்த 14ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி அதிகாலை 5 மணி வரை வரை பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலம் முழுக்க முழுக்க ஊடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.