பெரியகுளம் சோத்துப்பாறை அணையின் நீர்வரத்து அதிகரிப்பு .

பெரியகுளம் சோத்துப்பாறை அணையின் நீர்வரத்து அதிகரிப்பு .



தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோத்துப்பாறை  அணை .  இந்த அணை இரண்டு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளன.


 இந்த அணை அதிக அளவில் உயரம் கொண்டதாகும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் வருகின்றன . தற்போது  52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இப்பொழுது 56 அடியாக உயர்ந்துள்ளது.


 அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது என்று பெரியகுளம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும் அணையின் நீர் மட்டம் உயர்ந்தால் பெரியகுளத்தில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்றும் பெரிய குளத்தை சுற்றியுள்ள கண்மாய்க்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்


தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி