ஜூலை 31 வரை பேருந்து பொதுப் போக்குவரத்திற்கு தடை – தமிழக அரசு அறிவிப்பு!!


ஜூலை 31 வரை பேருந்து பொதுப் போக்குவரத்திற்கு தடை – தமிழக அரசு அறிவிப்பு!!




தமிழகத்தில் ஜூலை 15 வரை அரசு மற்றும் தனியார் பேருந்து பொதுப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் மட்டும் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது பிற மாவட்டங்களிலும் தீவிரமெடுத்து உள்ளது. இதனால் தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் தமிழகத்தில் ஜூலை மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பொழுது பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.




இந்நிலையில் ஜூலை 15 வரை அரசு மற்றும் தனியார் பேருந்து பொதுப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை தற்போது ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு சார்பில் கோரப்பட்டு உள்ளது. மேலும் வரும் 14ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.