'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும், தனித் தேர்வுகளுக்கும் இன்று முதல் ஹால் டிக்கெட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமும், பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவும் இவை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாணவர்களுக்கு இம்முறை ஹால் டிக்கெட்களுடன் தலா இரண்டு முக கவசங்களும் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. ஜூன் 8, 9 ஆம் தேதிகளில், மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளில் இவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மாவட்டங்களுக்கு 45 லட்சத்துக்கும் மேற்பட்ட முக கவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வீடு தேடி வரும் ஹால் டிக்கெட்: முன்னதாக, கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (containment zone) உள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் அவர்களின் வீடுகளுக்கே அனுப்பப்படும் என்று அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.