மகளிர் சங்கங்களில் எடுத்த கடனை கட்ட வலியுறுத்தும் ஐ.வி.டி.பி
கிருஷ்ணகிரியில் ஐ.வி.டி.பி. என்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராமங்களில் மகளிர் குழு அமைத்து குறைந்த வட்டிக்கு கடன் வழங்கி மாத தவணை முறையில் வசூலித்து வருகிறது. இதற்கென குழுக்களின் தலைவிகள் செயல்பட்டு வருகின்றனர்.
கோரோனா தொற்று நோய் காரணமாக மூன்று மாதத்திற்கு எவ்வித கடன் தொகையும் வசூலிக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஐ.வி.டி.பி. அமைப்பு கடன் தொகையை கட்ட வேண்டும் என்று கட்டாயபடுத்துகிறது. மேலும் சேமிப்புகளை வசூலித்துவிட்ட நிலையில் தற்போது கடனை செலுத்தாவிட்டால் வங்கியின் வட்டியை அவரவர்களே செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் வருகின்ற 10ம் தேதிக்குள் கடன் தொகையை கட்ட வேண்டும் என் நிர்பந்திக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனயாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மூா்த்தி. மாவட்ட நிருபா், கிருஷ்ணகிாி