சிறுகுறு தொழில் நிறுவனங்கள் என்றால் என்ன ?  மத்திய அரசு புதிய வரைமுறை.....

சிறுகுறு தொழில் நிறுவனங்கள் என்றால் என்ன ?  மத்திய அரசு புதிய வரைமுறை.....



சிறுகுறு தொழில் நிறுவனங்கள் என்றால் என்ன என்பது குறித்து மத்திய அரசு புதிய வரைமுறையை அறிவித்துள்ளது.


பொருளாதார சிறப்பு தொகுப்பு நிதியாக ரூ 20 லட்சம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு என்பதை டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.


தொழில் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானத்துக்கான (டர்ன்ஓவர்) கூடுதல் விதிகள் அறிமுகப்படுத்தப்படும். உற்பத்தி துறைக்கும் சர்வீஸ் துறைக்குமான வேறுபாடுகள் களையப்படும். தேவையான சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றார்.


அத்துடன் குறுதொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு 25 லட்சத்திலிருந்து ரூ 1 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டு வருமானம் 5 கோடி வரை இருக்க வேண்டும். சிறுதொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ 10 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ 50 கோடி வரை இருக்க வேண்டும்.


நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு 10 கோடி ரூபாயிலிருந்து 20 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ 100 கோடி வரை இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளை மாற்றி அமைத்துள்ளது அரசு.


சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ 3 லட்சம் கோடி கடன் அளிக்கப்படும். வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வசதிக்கு ரூ 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்புகள் வெளியாகி உள்ளது..


Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்