தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி...

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி...

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ளது. அதற்கு முன் தமிழகம் முழுவதும வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி  அடுத்த வாரம் துவங்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தமிழக பா.ஜ., தொண்டர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியில் நாம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஓட்டு சாவடியிலும் உள்ள எந்த வாக்காளர்கள் பெயரும் விடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. அதே நேரத்தில் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியில் ஈடுபடும் அரசுஅலுவலர்களுடன் இணைந்து நமது ஓட்டு சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்கள் யார் என்பதை அடையாளம் காட்ட நாம் உதவ வேண்டும்.

இந்த சிறப்பு திருத்த பணியை பயன்படுத்தி கொண்டு நம் ஆதரவு வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க சிலர் சதி செய்ய கூடும். எனவே நமது தொண்டர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உஷாராக, விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும்.

கிராமங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியின் போது, போதுமான ஆவணங்கள் இல்லை என கூறி அப்பாவி கிராம மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்பு உளளது.; எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் கிராம மக்களுக்கு நம் தொண்டர்கள் உதவ வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை தெளிவாக கேட்டுப்பெற வேண்டும். மேலும் நீக்கப்படும் வாக்காளர்கள் பெயர்கள் வேறு ஓட்டுச் சாவடிக்கு மாற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அந்த ஓட்டுச்சாவடி முகவர்களை தொடர்பு கொண்டு அந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்.

தேர்தலில் வெற்றிக்கு அடிப்படை வாக்காளர் பட்டியலும், அதனை சரியாக கையாளும் பூத் கமிட்டிகளும் தான். என் வாக்கு சாவடியில்  பா.ஜ.,  வெற்றி என்பதுதான் ஒவ்வொரு பூத் முகவர்களின் கோஷமாக இருக்க வேண்டும். அதனை நோக்கித்தான் நாம் பயணம் செய்ய வேண்டும்.

எனவே, இந்த வாய்ப்பை நாம் முறையாக பயன்படுத்தி எந்த வாக்காளர் பெயரும் விடுபடாமலும், யாருடைய பெயரும் நீக்கப்படாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மீண்டும்் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தமிழகம் முழுவதும் அதிகபட்சம் பத்து நாட்கள் வரை மட்டுமே நடக்கும். வீடு வீடாக வந்து அரசு அலுவலர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வரும் போது நமது தொண்டர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். 

வேறு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட, மாநில பா.ஜ., நிர்வாகிகள் தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் செய்ய தயாராக இருக்கின்றனர். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

உங்கள் வீட்டு பிள்ளை 

நயினார் நாகேந்திரன். தமிழ்நாடு மாநில தலைவர். பாரதிய ஜனதா கட்சி.