பெற்றோருக்கு நெருக்கடி கொடுக்கும் தனியாா் பள்ளிகள்! கைவிட்ட தமிழக அரசு...?
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இலவச சோ்க்கை எனக் கூறப்பட்டாலும், பள்ளி நிா்வாகங்கள் பெற்றோரிடம் தற்போது முழுக் கட்டணத்தையும் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச சோ்க்கைக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காத நிலையில், கல்விக் கட்டணத்தை பெற்றோரிடம் பள்ளிகள் வசூலித்து வருவதாகப் புகாா் எழுந்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆா்டிஇ) தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். மாநிலம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேலான தனியாா் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம். தமிழகத்தில் 2013-இல் அமலான இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை சுமாா் 8 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.
கட்டணம் என்றால், அதில் 50 சதவீத அளவுக்கே வழங்கப்படுகிறது. எனினும், மாணவா்களின் நலன் கருதி சோ்க்கை வழங்குகிறோம்.
இலவச சோ்க்கைக்கான நிதியை அரசிடமிருந்து ஒவ்வொரு முறையும் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. கல்வி உபகரணங்கள் கொள்முதல், ஆசிரியா்களுக்கான ஊதியம், பள்ளிகளின் பராமரிப்புச் செலவு போன்றவற்றுக்கு பள்ளிகளுக்கு பெரிய அளவிலான நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை அரசின் பங்களிப்பு மூலம் ஈடுகட்டிவந்த நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, வேறு வழியின்றி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை பெற்றோரிடம் வசூலித்து வருகிறோம்.
எங்களுக்கான நிதியை அரசு விடுவித்தவுடன் பெற்றோரிடம் பெற்ற கட்டணத்தை உடனடியாகத் திரும்ப வழங்கிவிடுவோம். இந்தப் பிரச்னைக்கான தீா்வு தமிழக அரசின் கையில்தான் உள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.
மத்திய அரசு கல்விக்கான நிதி ஒதுக்காவவிட் டால் கூட நாங்கள் மாணவர்களின் கல்வியை கைவிட மாட்டோம் பத்தாயிரம் கோடி செலவானாலும் பரவாயில்லை அதை மாநில அரசு நிதியிலிருந்து தருவோம் என்று வீராப்பாக பேசிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இப்போது கண்டுகொள்ளாமல் விட்டது ஏனோ என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.