காந்தி சொன்ன 15 வாழ்க்கைத் தத்துவங்கள்!

 காந்தி சொன்ன 15 வாழ்க்கைத் தத்துவங்கள்!

நமது தேசம் சுதந்திரம் அடைய மிகவும் போராடியவர், காந்திஜி. ஆயுதம் ஏந்திப் போராடுவதை வெறுத்த காந்திஜி, அன்பு மற்றும் அகிம்சை வழியைப் பின்பற்ற நினைத்தார். ஆயுதம் ஏந்தாமல், அன்பின் வழியில் பயணிக்கவும் ஒரு தைரியம் வேண்டும். அந்த வழியில் பயணித்த காந்திஜி வாழ்க்கையைப் புரிந்துக்கொண்டு, மக்களுக்கும் பல தத்துவங்களை கூறினார். அந்தவகையில் அவர் கூறிய 15 பொன்மொழிகளைப் பார்ப்போம்.

1. ஒருவனின் தூக்கமும், துக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.

2. தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் எதுவும் இல்லை.

3. எல்லா நீதிமன்றங்களையும்விட உயர்ந்தது மனசாட்சி எனும் நீதிமன்றம். அது எல்லா நீதிமன்றங்களுக்கும் மேலானது.

4. நம்பிக்கை காரணத்துடன் இருக்க வேண்டும். குருட்டாம்போக்கு நம்பிக்கை எளிதில் மறைந்துவிடும்.

5. எளிமையான வாழ்க்கை என்ற விருப்பத்திலிருந்து மாறும் மனிதனுக்குத் தேவைகள் அதிகரித்துவிடுகின்றன. இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும், மனநிலைதான் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

6. ஒரு மனிதனின் குறிக்கோளில் எந்த கணத்தில் சந்தேகம் எழுகிறதோ, அந்த கணமே எல்லாமே கறைப்பட்டுவிடும்.

7. இந்த உலகில் மனிதனின் தேவைக்கான வளங்கள் அனைத்தும் உள்ளன. ஆனால், பேராசையளவுக்கு வளங்கள் இல்லை.

8. உங்களை கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி, மற்றவர்களின் சேவையில் உங்களை இழப்பதே.

9. பலவீனமானவர் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னிப்பதே வலிமையானவரின் பண்பு.

10. முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிக்கிறார்கள், அவர்கள் உங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள், அவர்கள் உங்களுடன் சண்டையிடுகிறார்கள், பிறகே நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

11. வலிமை என்பது உடல் திறனில் இருந்து வருவதில்லை. அது அடக்க முடியாத விருப்பத்திலிருந்து வருகிறது.

12. நாம் என்ன செய்கிறோம் என்பதற்கும், நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கும் உள்ள வித்தியாசம்; உலகின் பெரும்பாலான பிரச்சனைகளைத் தீர்க்க போதுமானதாக இருக்கும்

13. நம்பிக்கை என்பது புரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல, அது வளர வேண்டிய நிலை.

14. கூட்டத்தில் நிற்பது எளிது, ஆனால் தனியாக நிற்க தைரியம் தேவை.

15. பொறுமையை இழப்பது என்பது போரில் தோற்றதற்கு சமம்.