தனியார் பள்ளிகளுக்கான பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரி... திண்டுக்கல்லில் மாநில செயற்குழு கூட்டம்....

 தனியார் பள்ளிகளுக்கான பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரி... திண்டுக்கல்லில் மாநில செயற்குழு கூட்டம்.... 

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.... 

திண்டுக்கல்லில்

மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்..

நாள்..27.07.2024.

சனிக்கிழமை காலை சரியாக 10.30. மணி அளவில். 

இடம்... வித்யா பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியம். சீலப்பாடி. திண்டுக்கல்.

அன்பிற்சிறந்த பள்ளி நிர்வாகிகள்  மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் தங்களின் மேலான கருத்துக்களை சொல்லி தனியார் பள்ளிகளை பாதுகாத்திட நமது உரிமைகளை மீட்டு எடுத்திட 

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசரம் கருதி பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி உள்ளோம். 

பள்ளி நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் தகவல் தந்து தமிழ்நாடு முழுக்க அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்..

திண்டுக்கல் TLV பப்ளிக் பள்ளி நிர்வாகி திரு. ராஜேந்திரன் அவர்களை கடுமையாக தாக்கிய குற்றவாளியை கைது செய்யக் கோரியும்.. 

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும்...

விண்ணப்பித்து காத்திருக்கக் கூடிய அனைத்து பள்ளிகளுக்கும் உடனடி தொடர் அங்கீகாரம் வழங்கிடவும்..

DTCP/CMDA  கட்டிட அனுமதி பழைய பள்ளி கட்டிடங்களுக்கு விதிவிலக்கு வழங்க கோரியும்...

நிலுவையில் உள்ள RTE கல்வி கட்டண பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டியும்.

அரசு பள்ளிகளை போல் தனியார் பள்ளிகளுக்கும் சொத்துவரிலிருந்து விலக்கு அளிக்க வேண்டி..

நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டி..

அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகள் ஆன பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கிட வேண்டி...

தனியார் பள்ளிகளின் ஒற்றுமையை உறுதி செய்திட அனைவரும் ஒன்று கூடி இன்றைய கல்விச் சூழலையும் அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்திட விவாதிப்போம் வாரீரென்று வணங்கி வரவேற்கிறோம். 

வருகின்ற பள்ளி நிர்வாகிகள் மாநில மாவட்ட சங்கத் தலைவர்கள் தங்கள் வருகையை இந்த Whats Up மூலம் உறுதி செய்திட வேண்டும் அப்பொழுது தான் உங்களுக்கு வேண்டிய 

 அனைத்தும் ஏற்பாடு செய்ய ஏதுவாகும்.

அன்புடன் உங்கள்

கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர். 9443964053

இர. கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் திண்டுக்கல் .

9865607368