மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

 மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் 

கிருஷ்ணகிரி,ஜுன்.21- கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில்  ஊராட்சி  ஒன்றிய குழு  உறுப்பினர்கள் கூட்டம 20.6.2024 காலை 11 மணி அளவில் மத்தூர் ஒன்றிய குழு தலைவர் பெ.விஜயலட்சுமி பெருமாள், ஒன்றிய குழு துணைத் தலைவர் ச.பர்வீன் தாஜ்சலீம் ஆகியோர் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், கூட்டத்தில் ஆணையாளர் உமா சங்கர், உதவி பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி (நிர்வாகம் ) சாந்தகுமாரி, பணி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் சம்பந்தமாக அனைத்து உறுப்பினர்களுடன் விவதிக்கபட்டது.