கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு....!!
*கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அவர்கள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று நீர்வளத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் புத்தனந்தல் அணைக்கட்டு புனரமைப்பு பணியினை ஆய்வு.*
*உளுந்தூர்பேட்டை வட்டம் புத்தனந்தல் கிராமத்தில் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புத்தனந்தல் அணைக்கட்டினை தற்பொழுது ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் புத்தனந்தல் அணைக்கட்டு நீர் போக்கினை சீரமைத்தல் மற்றும் அணைக்கட்டிலிருந்து 6 ஏரிகளுக்குச் செல்லும் வரத்து வாய்க்காலில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.*