லத்தேரி விஷன் வித்யாஸ்ரமம் சிபிஎஸ்இ பள்ளியின் 21வது ஆண்டு விழா

 லத்தேரி  விஷன் வித்யாஸ்ரமம் சிபிஎஸ்இ பள்ளியின்  21வது ஆண்டு விழா 

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் லத்தேரி  விஷன் வித்யாஸ்ரமம் சிபிஎஸ்இ பள்ளியின்  21வது ஆண்டு விழா  பள்ளியின் நிறுவனத் தலைவர் சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது.  பள்ளியின் இயக்குனர் ஸ்ரீதேவி சூரியகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.  

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் மற்றும் வேலூர் மாவட்ட செயலாளர் டாக்டர். டி. ராஜசேகர் ஆகியோர்  பங்கேற்று பள்ளியின் பல்வேறு பிரிவுகளில் முதல் இரண்டு மூன்றாம்  இடம் பெற்ற  மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கினார்கள்.

 விழாவில் சிறப்புரை ஆற்றிய வேலூர் மாவட்ட செயலாளர் டி. ராஜசேகர்  பெற்றோர்கள் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்து தாங்கள் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் தங்கள் பிள்ளைகள் நல்ல கல்விச்செல்வம் பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற நல்ல பள்ளிகளிலே சேர்த்து படிக்க வைக்கின்றனர்.  மாணவர்கள் இதை உணர்ந்து பெற்றோர்களின்  கனவுகளை நினைவாக்க நன்றாக படித்து பெயர் சொல்லும் பிள்ளைகளாக வளர வேண்டும் என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். 

 இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பெற்றோர்களின் ஆரவாரத்துடன் நடைபெற்றது