பர்கூர் நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏ, சேர்மேன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

 பர்கூர் நகரில் அதிமுக  முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏ, சேர்மேன் ஆகியோர்  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி,ஏப்.9- கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ. ஜெயபிரகாஷ் ஆதரித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே. பி. முனுசாமி  எம் எல் ஏ தலைமையில் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பர்கூர் ஒன்றிய குழு தலைவருமான கோவிந்தராசன் ஏற்பாட்டில் 2000- திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பர்கூர் நகரில் வீதி வீதியாக சென்று இரட்டை  இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி, பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. ராஜேந்திரன், பர்கூர் ஒன்றிய குழு தலைவர் கோவிந்தராசன், ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.எம்.மாதையன், மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தூயமணி, பர்கூர் நகர கழக செயலாளர் துரைஸ் ராஜேந்திரன்  உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

K. Moorthy Krishnagiri Reporter