போச்சம்பள்ளி எம்.ஜி.எம். பள்ளி 22-ஆம் பள்ளி ஆண்டு விழா

 போச்சம்பள்ளி எம்.ஜி.எம். பள்ளி 22-ஆம் பள்ளி ஆண்டு விழா

கிருஷ்ணகிரி,ஏப்.9- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எம் ஜி எம் பள்ளி 22 ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில்  எம்.ஜி.எம்.பள்ளியின் முதல்வர் எஸ். செல்வராஜ் வரவேற்றார், சி.இ.ஒ. செந்தூரி சரவணகுமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பிரபல சினிமா திரைப்பட நடிகை தேவயானி கலந்து கொண்டு  கடந்த ஆண்டு 10,  11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் தேவயானி பள்ளி சேர்மன் பி.ஜி.பன்னீர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும் தொழில் அதிபருமான எஸ்.ஆர்.ரங்கநாதன், பாளேத்தோட்டம் ஊராட்சி மன்ற தலைவர்  வேலாயுதம் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுத்தேர்வில் கணிதம், வேதியல், கணினி, அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களை அதிக மதிப்பெண் வாங்க வைத்த ஆசிரியர்கள் மஞ்சு, விஜயராஜ், தமிழரசன் ஆகிய மூன்று பேருக்கும் தங்க நாணயம்  பரிசாக வழங்கப்பட்டது. பள்ளி துணை முதல்வர் உமா மகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார், இறுதியாக மாணவர்கள் கலை நிகழ்ச்சி யோகா கராத்தே அபாக்ஸ் போன்ற 52 நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி  ஒருங்கிணைப்பாளர் சுகன்யா, மேனகா, சகினா, மாதப்பன்  ஆகியோர் செய்திருந்தனர்.

K. Moorthy Krishnagiri Reporter