தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு

 தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு

தனியார் பள்ளிகள் இயக்குனராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட திரு. பழனிச்சாமி அவர்களை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தில் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர். கே. ஆர். நந்தகுமார் அவர்கள் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் திருவாளர்கள்..J.B. விமல் .முனைவர்.N. ராஜன், சிமியோன், பாரத் மாதா மோகன், மனோகரன் ஜெயக்குமார்., விக்டர், லதா மற்றும் சங்கவை மற்றும் பலர் சந்தித்த போது எடுத்த படம்.

அப்பொழுது நமது மாநில சங்கத்தின் சார்பில் உடனடியாக அனைவருக்கும் ஆர். டி. இ. கல்வி கட்டண பாக்கியை உடனே தர வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்குமான தொடர் அங்கீகாரத்தை எந்தவித நிர்பந்தமும் நிபந்தனையில்லாமல் வழங்கிட வேண்டும்..

 தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர்கள்.. அலுவலக ஊழியர்கள் யாரும் தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி கோப்புகளை அனுப்ப அங்கீகாரம் வழங்க கையூட்டு பெறக்கூடாது..

ஆசிரியர்கள் முதல்வர்கள் நியமிப்பதற்கு மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் பெற வேண்டும் என்று வற்புறுத்துவதை

நீக்க வேண்டும். தனியார் பள்ளி வாகனங்களை அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு  கேட்கக் கூடாது... உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.