தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுக தலைமையின் கீழ் தான் மெகா கூட்டணி அமையும் - கேபி.முனுசாமி பேட்டி....
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற 11ம் தேதி மாற்றுக்கட்சியினர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது..
அதற்காக ஒசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது
இக்கூட்டத்துக்கு பகுதி செயலாளர் வாசுதேவன் வரவேற்புரையாற்றினார்,
இறுதியாக நன்றி உரை வட்ட செயலாளர் ஹேம குமார் ஆற்றினார்,
கட்சியினருக்கு கே.பி.முனுசாமி ஆலோசனைகளை வழங்கிய பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10000 தொண்டர்கள்,நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகின்றனர்
பாஜகவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் இணைந்தது குறித்த கேள்விக்கு:
அப்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜக வில் இணைந்திருக்கிறார்கள் என்றால் அநேகமாக அவர்கள் கட்சியில் செயல்படாதவர்களாக தான் இருக்கும்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும்
அதிமுகவிற்கு கதவு திறந்திருப்பதாக அமித் ஷா தெரிவித்திருப்பதாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு;
அதிமுக தான் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி, தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது. 2 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கத்தின் தலைமையில் தான் கூட்டணி.. அதிமுக தலைமையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளை சேர்த்துக்கொள்வோம்
பாஜக கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக்கொள்வீர்களா என்கிற கேள்விக்கு:
இது முடிந்த கருந்து இனி கேள்வி கேட்க அவசியமில்லை என பேசினார்
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மதன், ஒன்றிய கழக செயலாளர் ஹரிஷ் ரெட்டி, ரவிக்குமார் பாபு வெங்கடாசலம், சைலேஷ் கிருஷ்ணன் ,மாநகராட்சியின் மண்டல குழு தலைவர் ஜெய் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன்,ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கட் சாமி,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், அண்ணா தொழில் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னை கிருஷ்ணன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர்இளஞ்சூரியன், ஓசூர் மாமன்ற கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன், ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்ற சங்கர், சிவராமன், ரஜினி, ஓசூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் முரளி,ஹரி பிரசாத், சுரேஷ் பாபு, மாணவரணி மாவட்ட இணை செயலாளர் அருண், பாகலூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சினிவாச ரெட்டி,ஒன்றிய துணை செயலாளார் ரமேஷ், வட்டக் கழக செயலாளர்கள் சிவா, சீனிவாஸ், ஆனந்தபாபு,ரகுமான், கோபால ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி லக்ஷ்மணன், கழகப் பிரமுகர்கள் முபாரக் சாமிநாதன், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோரியமான கலந்து கொண்டனர்,.