தனி ரூட் எடுக்கும் விஜய்...! அதிர்ச்சியில் உதய்...!!

 தனி ரூட் எடுக்கும் விஜய்...!  அதிர்ச்சியில் உதய்...!!

கலைஞர் நூற்றாண்டை திரையுலகம்  கொண்டாடியது. இந்த விழாவில் கலந்து கொள்வதையும் புறக்கணித்துவிட்டார் விஜய்.

அதேபோல் நடிகர் அஜித்தும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இது தொடர்பாக தகவல் சென்றுள்ளது.

கடந்த நவம்பர் 27-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள். அந்த நாளில் நடிகர் ரஜினி காந்த், கமல் ஹாசன், சத்தியராஜ் தொடங்கி திரையுலகின் உச்சபச்ச பிரபலங்கள் வரை உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விஜய்யும் அஜீத்தும் வாழ்த்து சொல்லவில்லை. குறைந்தபட்சம், தனது சோசியல் பக்கத்திலாவது விஜய் வாழ்த்தியிருக்கலாம்.அதையும் செய்யவில்லை விஜய். 

அரசியல் தலைவர்கள் டாக்டர் அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்டவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லிய அவர், உதயநிதிக்கு வாழ்த்துச் சொல்லாதது அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜனவரி 5-ந்தேதி கனிமொழியின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் விஜய். இதனை கனிமொழி தரப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. உதயநிதிக்கு வாழ்த்துச் சொல்லாதவர் கனிமொழிக்கு வாழ்த்துச் சொல்லியிருப்பதை உதயநிதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, விஜய் பற்றி கட்சி நிர்வாகிகள் சொன்னதை உதயநிதி ஸ்டாலின் காது கொடுத்து கேட்டுக்கொண்டுள்ளார். இது ஒரு புறம் இருக்க, கலைஞர் நூற்றாண்டை திரையுலகம்  கொண்டாடியது .

இந்த விழாவில் கலந்து கொள்வதையும் புறக்கணித்துவிட்டார் விஜய். அதேபோல் நடிகர் அஜித்தும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

திரைத்துறையினர் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் 2 நாட்களுக்கு அனைத்து சூட்டிங்குகளும் கேன்சல் செய்யப்பட்டது. அப்படியிருந்தும் விஜய் வரவில்லை. இதையும் உன்னிப்பாக கவனித்திருக்கிறார் உதயநிதி. விஜய் சென்னையில்தான் இருந்தார். அஜித்தாவது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வரவில்லை.

ஆனால் விஜய் சென்னையில் இருந்து கொண்டே வரவில்லை. விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடத்திக்கொண்டு இருந்தார். அது முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக இலங்கையில் ஷூட்டிங் நடக்க உள்ளது. இந்த ஷூட்டிங்கிற்கு இடையில் தற்போது விஜய் பிரேக் எடுத்துள்ளார். அதன்படி விஜய் பிரேக்கில் இருந்தும் கூட சென்னையில் நடந்த இந்த நிகழ்விற்கு வரவில்லை.

விஜய் வராதது பற்றி உதயநிதிக்கு தகவல் சென்றுள்ளது. நேற்று இரவு உதயநிதியை சந்தித்த அவருக்கு நெருக்கமான 2 இளம் அமைச்சர்கள், "ரஜினி, கமல் எல்லாம் கலந்துக் கொள்ளும் போது அவர்களை விட இவன் ( விஜய் ) என்ன பெரியவரா? உங்களுக்கு வாழ்த்துச் சொல்லாத விஜய், கனிமொழிக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். இது என்ன கதை.. உங்களிடம் நெருக்கமாக தானே இருந்தார். இப்போது ஏன் இப்படி நடந்து கொள்கிறார்.

வரவில்லை என்பதை கூட அவர் சொல்லவில்லையே. என்னால் நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று ஒரு முறை போன் செய்து சொல்லி இருக்கலாமே. அப்படி சொல்லி இருந்தால் பிரச்சனை இருக்காது. இன்னைக்கு நீங்கதான் கலைஞர் விழாவை நடத்துறீங்கன்னு தெரிஞ்சும் அவர் வரலை.

உங்களை அவமானப்படுத்த வேண்டியே இப்படி செய்கிறாரா ? அவர் அரசியலுக்கு வர பிளான் போடுகிறார். அதனால் உங்களை சீண்டிப் பார்க்கிறாரா.. என்ன செய்யலாம் என்று சொல்லுங்க சார், என்றெல்லாம் உதயநிதியிடம் விஜய்யை பற்றி பற்ற வைத்துள்ளனர். 

இதன் அர்த்தத்தை புரிந்த உதயநிதியும், விஜய் பற்றி அமைச்சர்கள் மற்றும் திமுக இளைஞரணி முக்கியஸ்தர்கள் சொன்னதை கேட்டுக்கொண்டு புன்முறுவலோடு சென்று இருக்கிறார்.

மிக்ஜாம் புயலில்  சென்னை மக்கள் பாதிக்கப்பட்ட போது  அரசுடன் இணைந்து விஜய் மக்கள் இயக்கத்தினர்  மக்கள் பணியாற்ற வேண்டும் என்று விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  அதை ஏற்று விஜய் மக்கள் இயக்கத்தினரும் நிறைய பணிகளை செய்தார்கள் அதை வைத்து ஆளும் தரப்பினர் விஜய் நம்முடன் இருக்கிறார் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.

 இந்நிலையில் திரையுலகம் சார்பில் அதுவும் இளைஞர் அணி தலைவர் உதயநிதியின் தலைமையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சி சொதப்பலில் முடிந்துள்ளது.  கமல் ரஜினி என்று  பெரிய பெரிய திரையுலக ஜாம்பவான்கள் எல்லாம்  பங்கேற்றும்  நிகழ்ச்சி நடந்த இடமே வெறிச்சோடி கிடந்தது உதயநிதிக்கு மிகப்பெரிய தோல்வியாகவே தெரிகின்றது.  அதிலும் நடிகர் விஜய்யும் அஜித்தும் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து இருப்பது உதயநிதிக்கு மட்டுமல்ல ஸ்டாலின் நிற்கும் கடுமையான  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 விஜய் என்ன தனி ரூட் எடுக்க போகிறாரா...?  எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நமக்கு எதிராக களம் இறங்க போகிறாரா...?!  என்றெல்லாம் ஆளும் தரப்பு யோசிக்க தொடங்கி இருக்கிறது......