அயோத்தி ராமர் கோயில் அட்சதை கும்பம் பஞ்சாயத்து பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பு

 அயோத்தி ராமர் கோயில் அட்சதை கும்பம் பஞ்சாயத்து பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பு

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக் கட்டளை பூஜை செய்த அட்சதை கும்பம் மற்றும் ராமரின் திருவுருவப் படம் அடங்கிய தொகுப்பு, சங்க பரிவார் அமைப்பின் மூலம், நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட் டுள்ளன.

இந்த புண்ணிய பூஜை பொருட்கள் நாட்டின் அனைத்து கிராமத்து வீடுகளை சென்றடையும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஸ்ரீராமஆஞ்சநேயர் கோயிலில் வைத்து பூஜை செய்து அனைத்து பஞ்சர்யத்து  பொறுப்பாளர் கள் குழுவிடம் ஒப்படைககும் நிகழ்ச்சி நேற்றுநடந்தது. அதைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாபற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நிகழ்ச்சியை சங்க பரிவாரின் ஒன்றிய பொறுப்பாளர்கள் சித்தேஷ் ஜெய்சங்கர், ரவி, கிருஷ்ணன், பிரகாஷ்  மற்றும் ஒன்றியபொறுப்பாளர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ராயக்கோட்டை பகுதிபொறுப்பாளர்கள் கோபி குமாரதேவன் கெலமங்கலம் பகுதி பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன் ஆனந்த ரெட்டி கோபால் தேன்கனிகோட்டை பொறுப்பாளர்கள் ரவி பாலாஜி வெங்கட்ராஜ் ரவி அஞ்செட்டி பகுதி கிருஷ்ணமூர்த்தி லட்சுமணன் மூர்த்தி கிருஷ்ணன் மற்றும் சங்க பரிவார் அமைப்பு நிர்வாகிகள் நாகராஜ், இந்துமுண்ணனி கார்த்திக், ஹரிஷ், ரகு, ரவி பாஜ நிர்வாகிகள் ராமசந்திரன் ,ரங்கநாத், சதிஷ், தனபால் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பக்தர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை ராமஆஞ்சநேயர் கோயிலில், அயோத்தி ராமர் கோயில் அட்சதை கும்பம் அடங்கிய தொகுப்புக்கு சிறப்பு பூஜை செய்து பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .