தளியில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

 தளியில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பிடிஓ அலுவலகத்தில், யூனியன் கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சீனிவாசலு ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது.  பிடிஓ பாலாஜி முன்னிலை வகித்தனர்.

வரும் அடிப்படை வசதிகள் குறித்தும், யூனியன் கவுன்சிலர்களின் பகுதிகளில் ஒன்றிய நிதியிலிருந்து நடைபெறவுள்ள ரூ3.40 கோடி மதிப்பிலான வளர்ச்சிபணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

. யூனியன் கவுன்சிலர்கள், பொறியா ளர்கள் மற்றும் பிடிஓ அலுவலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

மேலும் ஒன்றிய கவுன்சிலர்களின் பதவிகாலம் 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5 ஆம் ஆண்டில் அடிவைத்து வைக்கிறது இதனால் 4 ஆண்டுகாலமாக கவுன்சில் கூட்டத்தை சுமுகமாக நடத்தி சென்ற ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி க்கு கவுன்சிலர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது இதில் அவருக்கு மலர் மாலை அணிவித்து பராட்டு தெரிவித்தனர் மேலும் இருக்கும் ஒரு ஆண்டையும் கூட்டத்தை சுமுகமாக நடத்தி செல்லவேண்டும் என கூறினர்