விவசாயிகளுக்கு சரியான முறையில் பத்திர பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்

 விவசாயிகளுக்கு சரியான முறையில் பத்திர பதிவுகளை   மேற்கொள்ள வேண்டும் 

தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்..

தீர்மானம் .1

 04.01.2024 அன்று தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் ஆதனூர் கிளாப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் ஆலோசனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் G.முருகன், மாநில துணை தலைவர் N.மாரி, மாநில பொருளாளர் G.சதீஷ் மாநில சிறப்பு தலைவர்  R.துரைசாமி,  மாநில ஆலோசகர் பம்பை ராஜேந்திரன்,மாநில கௌரவ தலைவர் விஜயகுமார் , மாநில செயற்குழு உறுப்பினர்  ஆகியோர் தலைமையில்     கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.சிவா மற்றும் உறுப்பினர்கள் S.ஐயப்பன் , S.கல்வராயன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .இந்த ஆலோசனை பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தீர்மானம் ஆனது விவசாயிகளுக்கு ஒரே சர்வே எண்ணில் இரு முறை பதிவு செய்தல், லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேடாக பதிவு செய்தல், மற்றும் தவறான முறைகேடான போலி பத்திரங்களை உருவாக்கி விவசாயிகளை ஏமாற்றுதல் போன்ற செயல்களை செய்து வருகின்றனர் இதனை விருத்தாச்சலம் தலைமை சார்பதிவாளர் அவர்கள் தலையிட்டு உடனடி  துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு சரியான முறையில் பத்திர பதிவுகளை   மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது  

தீர்மானம்.2 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ.செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. கணேசன் த/பெ துளசி என்பவரை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுத்து தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.