12-ம் வகுப்பில் தலைசிறந்த மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா

 12-ம் வகுப்பில் தலைசிறந்த மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் & சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து 12-ம் வகுப்பில் தலைசிறந்த மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா இன்று வேல்ஸ் பல்கலைக்கழகலையரங்கில் நடைபெற்றது .

1500 மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் அரசு தேர்வு துறை இயக்குனர் எஸ். சேதுராமா வர்மா அவர்கள் கலந்து கொண்டு சிறந்த மாணவர்களுக்கான விருதுகள் சான்றுகள் விருந்துகள் வழங்கி கவுரவித்து சிறப்புரையாற்றினார்.. 

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.கே. ஆர். நந்தகுமார் விழா தலைமை உரையாற்றினார் . 

விழாவில் நம் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மற்றும் இணை வேந்தர் டாக்டர். ஆர்த்தி கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழக துணை தலைவர் டாக்டர் .பிரித்தி கணேஷ் பல்கலைக்கழக ரிஜிஸ்டர் மற்றும் சங்கத்தின் மாநில மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பறையாற்றிய போது எடுத்த படம்.