கெலமங்கலத்தில் பாழடைந்த காவலர் குடியிருப்புகள்... புதிய குடியிருப்பு கட்டிகொடுக்க கோரிக்கை....

 கெலமங்கலத்தில் பாழடைந்த காவலர் குடியிருப்புகள்... புதிய குடியிருப்பு கட்டிகொடுக்க கோரிக்கை....

ஓசூர்

கெலமங்கலத்தில் பாழடைந்த காவலர் குடியிருப்புகள் பயன்பாடுயின்றி உள்ளதை அகற்றி புதிய குடியிருப்புகள் கட்டிகொடுக்க   காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் நண்பன் என்று  சொல்லக்கூடிய காவல்துறையினர் தங்களின் பிறப்பிடத்தை விட்டு விட்டு தழகத்தில் பல்வேறு   மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர். ஆனால்  இவர்களுக்கான  குடியிருப்புகள் பல இடங்களில் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது. அதோ போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில்  புதிய காவல் நிலையம் 1915 ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.  பின்னர் 2009-ம் ஆண்டு புதிய காவல்நிலையம் கட்டப்பட்டது. 

அதே போல் 1960 -ம் ஆண்டு   அப்பகுதியில்  காவலர்கள் குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு அதில்  ஒரு உதவி ஆய்வாளர் குடியிருப்பு, 8 காவலர்கள் குடியிருப்பு உள்ளது. நாளடைவில்  இந்த குடியிருப்புகள்  போதிய பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பாழடைந்து, செடி,கொடிகள் புதர் மண்டியிட்டு பாம்புகள், எலிகள் உள்ளிட்ட விச ஜந்துக்களின் வாழ்விடமாகவும்,  சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி   தற்போது அங்கு பணிபுரியும் உதவி  ஆய்வாளர் உட்பட 29 காவலர்கள் வாடகை வீடுகளிலும் மற்றும்  வெளியூர்களிலும் தங்கி பணி செய்கின்றனர்.  இதனால் பாழடைந்துள்ள குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகளை கட்டிகொடுக்க வேண்டும் என கெலமங்கலம் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

B. S. Prakash