திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்

 திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் திம்ஜேப்பள்ளி ஊராட்சி பெரிய உள்ளுகுறுக்கையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் ஈஸ்வரிமுத்தன் தேசிய கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது அதை தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது கூட்டத்துக்கு தலைவர் ஈஸ்வரி முத்தின் தலைமை தாங்கினார். கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவுசெலவுகளை வாசித்து அங்கிகரிக்கப்ட்டது, பொது சுகாதாரம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ௹.40 லட்சத்தில் நடைப்பெறும் திட்டப்பணிகள், தேசி ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைப்பெற்று வரும் திட்டபணிகள் உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பார்வையாளார்களாக

 கெலமங்கலம் ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர், கூட்டத்தில் துணைத்தலைவர் சுரேகா கோவிந்தராஜ், வார்டு உறுப்புனர்கள், கிராம பொதுமக்கள் திராளாக கலந்துக்கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் விவேகணந்தா செய்திருந்தார்.