*ராஜீவ்காந்தி நினைவு ஜோதிக்கு ஓசூரில் காங்கிரசார் வரவேற்பு.*
ஓசூரில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதிக்கு காங்கிரசார் வரவேற்பு அளித்தனர். ராஜீவ்காந்தி 32வது ஆண்டு நினைவு ஜோதி நேற்று காலை ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. வேலுார், கிருஷ்ண கிரி வழியாக நேற்று மாலை 6.30 மணியளவில் நினைவு ஜோதி ஓசூர் வந்தடைந்தது.
ஓசூரில் சீத்தாராம் மேடு பகுதியில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில், தமிழ்நாடு ஐஎன்டியூசி செயல் தலைவரும், டிவிஎஸ் எம்பிளாயீஸ் யூனியன் தலைவருமான குப்புசாமி, மாநகர காங்கிரஸ் தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராஜீவ் ஜோதி யாத்ரா சேர்மன் கோமதீசன், மாவட்ட துணை தலைவர் கீர்த்திகணேஷ், மாவட்ட பொருளாளர் மாதேஷ், மாவட்ட மகளிரணி தலைவி சரோஜா, ஓபிசி மாவட்ட தலைவர் குமார், மாநகர பொது செயலாளர் இர்ஷாத், மாநகர துணை தலைவர் அர்ஷாத் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.
E. V. Palaniyappan