ஓசூர் அருகே சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு வாலிபர்கள் பலி

 *ஓசூர் அருகே சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு வாலிபர்கள் பலி*

ஓசூர் அருகே கெலமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் சௌடேஸ்வரி கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தப்பா என்பவர் மகன் திம்மராஜ் (23) அதேபோல கெலமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவரது மகன் சிவக்குமார் (24) இவர்கள் இருவரும் நண்பர்கள், நேற்று திம்மராஜும் சிவகுமாரும் பல்சர் இருசக்கர வாகனத்தில் கெலமங்கலத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி சென்றுள்ளனர்.

கெலமங்கலம் அரசு மதுபான கடை அருகே உள்ள பாலத்தின் வளைவில் இருவரும் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற சிவகுமார் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த திம்மராஜ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகஅடிபட்டவர்களை கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல் சிடி சேர்க்கப்பட்டது அப்போது திமிராஜ் என்றவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். சிவா என்கின்ற சிவகுமாரை ஓசூருக்கு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திம்மராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட சிவக்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து கெலமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் வாலிபர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கெலமங்கலம் நகரின் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதாகி இருப்பதால் வாலிபர்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் எது என்பது தெரியாமல் உள்ளது. எனவே இது போன்ற சம்பவங்களை தடுக்க உடனடியாக சிசிடிவி கேமராக்களை பழுது பார்க்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.