தளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

தளி அரசு மேல்நிலைப் பள்ளி  மாணவ மாணவியர்களுக்கு  விலையில்லா மிதிவண்டி

தளி சட்டமன்றத் தொகுதி தளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன் B.Sc.,LLB.,MLA அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு வழங்கி மேலும் கணிதத்தில் 500 க்கு 500 பெற்ற மாணவிகளுக்கு பதக்கம் அணிவித்தும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் அளித்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர் பெருமக்கள், மாவட்ட கவுன்சிலர் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரசாந்த், ஜெகதீஷ், தளி ராஜண்ணா, நிக்சல், PTA தலைவர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.