பி.டி.ஆர் நகர்,பகுதியில் மண் சாலையை தார் சாலை ஆக்கும் திட்டம்

பி.டி.ஆர் நகர்,பகுதியில் மண் சாலையை தார் சாலை ஆக்கும் திட்டம்

ஒசூர் மாநகராட்சி 1,2-வது வார்டிற்குட்பட்ட    ஜூஜூவாடி , உப்கார் லேஅவுட்,  ஆபிஸர் காலனி, திருவள்ளூர் நகர், ராஜாஜி நகர், காந்தி ரோடு, ஜெய் பீம் நகர், நேதாஜி நகர், எஸ்.எல்.வி.நகர், பி.டி.ஆர் நகர்,பகுதியில் மண் சாலையை தார் சாலை ஆக்கும் திட்டம் மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 6 கோடியே 32 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், பணிகள் நடைபெற்று வரும் பணிகளை  மாநகர மேயர் S.A.சத்யாEx.MLA அவர்களும் மாநகராட்சி ஆணையாளர் சினேகா மற்றும் அதிகாரிகளுடன் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர் 

அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரம், அதன் உயரம், அகலம் குறித்தும் மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள்,  குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா என கேட்டறிந்தனர் 

பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தேன்.

இந்நிகழ்வில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள் அசோக் ரெட்டி, ஸ்ரீதர், வார்டு கழக செயலாளர்கள் வடிவேல், சாகர்,  டி.வி.கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

E. V. Palaniyappan 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்