தேன்கனிக்கோட்டை அருகே சுதந்திரப் போராட்ட வீரர் சங்கொலி ராயண்ணா 227 வது பிறந்தநாள் விழா

தேன்கனிக்கோட்டை அருகே சுதந்திரப் போராட்ட வீரர் சங்கொலி ராயண்ணா 227 வது பிறந்தநாள் விழா

இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்கள் எதிர்த்து போராடிய கித்தூர் ராணி சென்னம்மாவின் போர் படைதளபதியாகஇருந்தவர் சங்கொலி ராயண்ணா இவர் 1798 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் பிறந்தவர் ஆங்கிலேருடன் எதிர்த்து போராடிய  ராணி சென்னம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போரில் தனி வீரனாகபோராடி ஆங்கிலேயர்களை கதி கலங்க வைத்தார்  ஆங்கிலேயர்கள் பெறும் படை திரட்டி வந்து சங்கொலி ராயண்ணாவை கைது செய்து 1831 ஆம் ஆண்டு ஜனவரி 26 நாள் தூக்கிலிடப்பட்டார் இந்தப் போர் விரனின் தியாகத்தை நினைவு படுத்தும் வகையில் இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அரசகுப்பம் கிராமத்தில்  ச  சங்கொலி ராயண்ணா வின் 227 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில எஸ். டி அணிசெயலாளர் பாப்பண்ணா தலைமை வகித்தார், ஊர் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர்,  முன்னதாக சங்கொலி ராயண்ணாவின  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வெங்கட்ராஜ், சேகர் ,  மாதேஷ், கோபால், ராமன், பிரகாஷ், அண்னையப்பா, லிங்கப்ப n மற்றும் கிராம பொதுமக்கள்  கலந்து கொண்டனர் .

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....!
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்