விவசாயிகள் எடுத்துச் செல்லும் தானியங்களுக்கான முறையாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை

 விவசாயிகள் எடுத்துச் செல்லும் தானியங்களுக்கான முறையாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மீண்டும் விவசாயிகள் எடுத்துச் செல்லும் தானியங்களுக்கான நெல், உளுந்து,  மணிலா, எள் போன்ற அனைத்து தானியங்களுக்கும் முறையாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை மீண்டும் பழைய நிலைமைக்கு சென்று கொண்டிருக்கிறது. உளுந்தூர்பேட்டை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் இதனைக் கேட்கச் சென்றாள் அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை .ஏற்கனவே விவசாயம் நட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் கொண்டு செல்லும் பயிர்களுக்கான தொகையும் வழங்கப்படாமல் இருந்தால் அந்த விவசாயி தனது குடும்பத்தை எவ்வாறு நடத்துவது .எனவே  இதனை தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் இதனால் விவசாயிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் மீண்டும் உளுந்தூர்பேட்டை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு முறையாக பணம் பட்டுவாடா செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

.  கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்