10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது...? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!

 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது...? அமைச்சர் வெளியிட்ட  அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 19ம் தேதியன்று வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

2023 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 5.01 லட்சம் மாணவர்கள், 4.75 லட்சம் மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுளளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 8, 36,593 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,451 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்றவர்களின் விகிதம் 94.03 ஆகும். மாணவர்களை விட மாணவிகளை கூடுதலாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5.36% ஆக இருந்தது.

இந்த பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ம் தேதி உடனடி சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அனைத்து பாடங்களுக்கும் நடத்தப்படும் இந்த துணைத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலே உயர்கல்வியைத் தொடரலாம்.