NEET UG 2023: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 NEET UG 2023: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு....!

NEET UG 2023: தேசிய தேர்வு முகமை (NTA) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) பதிவுகளை ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 இரவு 11:30 மணி வரை மீண்டும் திறக்க உள்ளது. இதுவரை தேர்வுக்கு பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் சாளரம் ஏப்ரல் 13 இரவு 11:59 வரை திறந்திருக்கும்.

முன்பு பதிவு செய்து முடிக்க முடியாத அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், NEET (UG) – 2023 க்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது,” என அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NEET UG 2023 தேர்வு மே 7 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5:20 மணி வரை பேனா மற்றும் பேப்பர் முறையில் நடைபெறும். ஏப்ரல் 6 ஆம் தேதி மூடப்பட்ட பதிவு சாளரம் ஆர்வமுள்ள மாணவர்களிடமிருந்து பல கோரிக்கைகளைப் பெற்ற பிறகு மீண்டும் திறக்கப்படுகிறது. நாடு முழுவதும் 499 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் NEET UG தேர்வு நடத்தப்படும்