கருணை மதிப்பெண்கள் கேட்டு..... கல்வியை கருணை கொலை செய்யும் பட்டதாரி ஆசிரியர்கள்....!!

 கருணை மதிப்பெண்கள்  கேட்டு..... கல்வியை கருணை கொலை செய்யும் பட்டதாரி ஆசிரியர்கள்....!!

 ஒருபுறம் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை  ஆப்சென்ட் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்  என்கிற பிரச்சினை ஓடிக் கொண்டிருந்தாலும்,  அதற்கு 1008 கணக்குகளை   தமிழக அரசும் ஆசிரியர்  பெருமக்களும் சொல்லிக் கொண்டிருந்தாலும்  இன்னொரு புறத்தில் அந்தப் பாடத்தில் அந்தக் கேள்வி தவறு இந்தப் பாடத்தில் இந்த கேள்வி தவறு என்று இவர்கள் தயாரித்து கொடுத்த கேள்வித்தாளிலே இவ்வளவு குழப்பங்கள் இருக்கிறது என்று கூறி அதற்கெல்லாம் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சொல்லி கோரிக்கை வைப்பது ஒரு வியாதியாகவே பரவி விட்டது.

அரசும் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு மதிப்பெண்கள் வழங்குவதும் வாடிக்கையாகி விட்டது. மொத்தத்தில் ஏதோ ஒரு கணக்கில் தேர்வு எழுதினாலும் சரி எழுதாவிட்டாலும் சரி ஏதோ ஒரு வகையில் தேர்ச்சி கொடுப்பதற்கு தயாராகி விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் உழைக்காமல் ஊதியம் பெறுவது போல் படிக்காமலே பாஸ் ஆகி விடலாம் என்கிற கலாச்சாரம் பரவி வருவது கல்விக்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.

இதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரிந்த சில ஆசிரியர்களிடம் விசாரித்த போது அவர்கள் இந்த அதிர்ச்சிகரமான செய்தியை தெரிவித்துள்ளனர்.

எந்த அரசு பள்ளி ஆசிரியர்களும் இந்த ஆண்டு நமது பள்ளி மாணவர்கள் இத்தனை பேர் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள் அவர்களை ஒழுங்காக தயார் படுத்த வேண்டும் என்று எவரும் நினைப்பதில்லை. இதற்கு அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் எதுவும் அளிப்பதில்லை. ஒரே ஒரு பாடத்தைக் கூட ஒழுங்காக நடத்துவதில்லை. 

 இந்த மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று யாரும் ஆசைப்படுவதில்லை. அனைவரும் ஜஸ்ட் பாஸ் ஆனால் போதும் ஆல் பாஸ் கொடுத்தால் போதும் என்கிற வகையில் மெல்ல கற்கும் மாணவர்களுக்காக அரசு தயாரித்து வைத்திருக்கும் சுருக்கமான விடைகளை மட்டும் படித்தால் போதும் ஒவ்வொரு பாடத்திலும் 35 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்கிற எல்லை கோட்டுக்குள்ளே அவர்கள் தங்கள் பணிகளை முடித்து விடுவதால் இப்படி சிக்கலான கேள்விகள் கேள்வித்தாளில் குழப்பங்கள் ஏற்படும் போது தடுமாறி அந்த ஒன்று இரண்டு மதிப்பெண்கள் இழந்து விட்டால் கூட ஒவ்வொரு பள்ளியும் பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதால் கருணை மதிப்பெண் கேட்டு கல்வியை கருணை கொலை செய்து வருகிறார்கள்.

இப்போது கூட பெரும்பாலான அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் என்று சொன்னால் அவர்கள் அனைவரும் தங்களின் ஆரம்பக் கல்வியை தனியார் பள்ளிகளில் முடித்தவர்கள். இவர்களை வைத்துத்தான் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் கடமையை ஒப்பேற்றி கொண்டுள்ளனர். பெரும்பாலான பள்ளிகளில் இவர்கள்தான் சட்டாம்     பிள்ளைகள்.... 

 கரும்பலகைகளில் எழுதுவது தொடங்கி மாணவர்களை வழி நடத்துவது வரை அனைத்து பணிகளையும் இவர்கள் தான் கவனிக்கிறார்கள். ஆசிரியர்கள் செய்ய வேண்டிய எல்லா அசைன்மென்டையும் இவர்களிடமே கொடுத்து விடுகிறார்கள்.

இவர்கள் இல்லாவிட்டால் அவர்களின் செயல்பாடு ஒன்றுமில்லை. அவர்கள் நேரத்திற்கு பள்ளிக்கு வருவதும் இல்லை. வந்தாலும் ஒழுங்காக பாடம் நடத்துவதில்லை என்பதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

 இப்போது இவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேறு கொடுக்கப்பட்டு இருப்பதால் இவர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

 நீங்களே சிந்தித்துப் பாருங்கள் தமிழகத்தின் கல்வி பாழாய் போவதற்கு யார் காரணம் என்று....?!




.