தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்களுக்கு பதிவு ரத்து., மத்திய அரசுக்கு கோரிக்கை!!!
நாட்டில் காற்று மாசுபாடுவதை தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பழமையான வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு வாகனங்களை அழிக்க கடந்த அக்டோபர் மாதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
இதற்கான கால அவகாசம் நேற்றுடன் (மார்ச் 31) முடிவடைந்துள்ளதால் இன்று முதல் அரசுக்கு சொந்தமான வாகனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக சாலை போக்குவரத்து துறை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதில் போக்குவரத்து மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் சம்பந்தப்படுவதால் தமிழ்நாடு போக்குவரத்து துறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளது.
அதில் 15 ஆண்டுக்கு மேல் உள்ள பழமையான அரசு வாகனங்களை அழிக்க இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே கூடுதல் கால அவகாசத்தை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை பயன்படுத்த தடை மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்ட. இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பழைய பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில், உள்ள 15 ஆண்டுகள் பழமையான 1650 பேருந்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் இன்னும் வாங்கப்படாமல் இருப்பதால், பேருந்து வசதி இல்லாமல் கிராமப்புற மக்கள் அவதியில் இருக்கின்றனர்.