கலாஜத்தா -‌கலைநிகழ்சி மூலம் வேளாண் திட்டங்கள் எடுத்து கூறுதல்.

கலாஜத்தா -‌கலைநிகழ்சி மூலம் வேளாண் திட்டங்கள் எடுத்து கூறுதல்.

கெலமங்கலம் வட்டாரம் வேளாண்மைத் மற்றும் உழவர் நலத்  துறை அட்மா திட்டத்தின் சார்பில் காலஜதா கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்கள் கூறப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் கெலமங்கலம் ‌கலா அவர்கள் தலைமை வகித்தார்.ஜெகதேவி விநாயகா கோலாட்ட கலை குழு பங்கேற்று வேளாண்மைத் துறையின் மூலம் செயல் படுத்தும் திட்டங்கள் ,சொட்டு நீர் பாசனம்,பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் அட்மா திட்டம் பற்றி கலைநிகழ்ச்சி யின் மூலம் எடுத்து கூறினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு உதவி வேளாண்மை அலுவலர் வினோத் குமார் , அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா மற்றும் 50 மேற்பட்ட விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

B. S. Prakash