எட்டயபுரம் ஆசிரியரை தாக்கிய கயவன் குண்டர் சட்டத்தில் கைது....!

எட்டயபுரம் ஆசிரியரை தாக்கிய கயவன்  குண்டர் சட்டத்தில்  கைது....!

♻️ *தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (38) என்பவர் எட்டையாபுரம் காவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.*

♻️ *நேற்று பாரத் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் பாடத்தை கவனிக்காமல் பின்னால் இருந்தவரை ஆசிரியர் பாரத் அந்த மாணவனை முன்னாள் வந்து உட்காரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவர் முன்னாள் வரும் போது தவறி கீழே விழுந்துள்ளார்.*

♻️ *இந்த சம்பவம் குறித்து அன்றைய தினமே அந்த மாணவனின் பாட்டியானா கீழநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (53) என்பவரது மனைவி மாரிசெல்வி என்பவர் ஆசிரியர் பாரத்தை சத்தம் போட்டுச் சென்றுள்ளார்.*

♻️ *இந்நிலையில்  (21.03.2023) மதியம் ஆசிரியர் பாரத் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த  மேற்படி 2ம் வகுப்பு மாணவனின் பெற்றோரானா ஓட்டப்பிடாரம் தெற்கு கல்மேடு பகுதியைச் சேர்ந்த தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் மாணவனின் தந்தை முனியசாமி மகன் சிவலிங்கம் (34), சிவலிங்கம் மனைவி செல்வி (28) மற்றும் மாணவனின் தாத்தா முனியசாமி (53), முனியசாமியின் மனைவி மாரிச்செல்வி ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் பாரத்தை தவறாக பேசி பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியரை ஓட ஓட விரட்டி கை மற்றும் கம்பால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.*

♻️ *இதுகுறித்து ஆசிரியர் பாரத் அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.*

♻️ *இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன்  மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.*

♻️ *அவரது உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியரை தாக்கிய எதிரிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிவலிங்கம், செல்வி மற்றும் முனியசாமி ஆகியோர் 3 பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தனர்.*

♻️ *மேலும் இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் படி அவர் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல் முதலாக ஆசிரியர்களை யார் தாக்கினாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் அவர்கள் தான்.

 பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்டதற்கு தமிழகத்தில் முதன் முதலில் கண்டன குரல் எழுப்பி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வேலூரில் வரும் நாளை மறுநாள் போராட்டத்தை அறிவித்தவுடன் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் இதுதான் முதல் முறை இதுவே நமக்கு வெற்றி

இதையே நிரந்தரமாக்குவோம். பள்ளிகளோ ஆசிரியரோ எங்கு யார் தாக்கினாலும் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பு சட்டம் இயற்ற வைப்போம்.