தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற ஓசூர் மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு.

 தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற ஓசூர் மாணவர்களுக்கு  மேளதாளத்துடன் வரவேற்பு.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 19, 17,14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு இடையே தேசிய அளவில வாலிபால் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது,

இம்மாதம் 6, 7 ,8 தேதிகளில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் தமிழகம் ,பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களிலிருந்து வந்திருந்த மாணவர்கள் விளையாடினர், இதில் ஓசூர் பள்ளி மாணவர்கள் அனைத்து வயதினரும் முதலாவதாக வெற்றி பெற்று கோப்பையும் பரிசையும் மெடலையும் பெற்றுள்ளனர்.

ஓசூர் ஈகிள்ஸ் கிளப் சார்பில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 28 மாணவர்களை தேர்வு செய்து தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....

இதில் இறுதிப் போட்டியில் 19 வயதிற்குட்பட்ட விளையாட்டு போட்டியில் பஞ்சாப் அணி 19 புள்ளிகளும் ஒசூர் மாணவர்கள் 25 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றனர்.

இதேபோல் 17 வயதுக்கு உட்பட்ட விளையாட்டில் ஓசூர் மாணவர்கள் 25 புள்ளிகளும் உத்தரபிரதேசம் மாணவர்கள் 22 புள்ளிகளை பெற்று தோல்வியை சந்தித்தனர் இதேபோல் 14 வயதுக்கு  உட்பட்ட போட்டியில்  25 புள்ளிகளை பெற்று ஒசூர் மாணவர்கள் வெற்றி பெற்றனர், 18 புள்ளிகளைப் பெற்று பஞ்சாப் மாணவர்கள் தோல்வியை சந்தித்தனர்.

வெற்றிபெற்ற மாணவர்கள் இரவு ஓசூர் வந்தடைந்தனர் அவர்களை பெற்றோர்கள் சக மாணவர்கள் மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.