TET Exam வெறும் 14% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி

TET Exam வெறும் 14% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி



சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 14 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட நிலையில் இந்த ஆசிரியர்கள் தான் எதிர்காலத்தில் வலுவுள்ள சமுதாயத்தை உருவாக்க போகிறார்களா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் தேர்வு தாள்-1ல் வெறும் 14% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணிபுரிய தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1ஐ ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதிய நிலையில் அதில் வெறும் 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தகுதித்தேர்வு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1ஐ ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதிய நிலையில் அதில் வெறும் 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தகுதித்தேர்வு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் ஆசிரியர் தேர்வு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்திருந்தது. மேலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்த நிலையில் அதனை மாற்றி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆயுள் முழுவதும் சான்றிதழ் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆசிரியர் பயிற்சி தேர்வு தகுதி தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை 1,53,233 ஆசிரியர்கள் எழுதிய நிலையில் அதில் 21,543 மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்க தகுதி உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தேர்வு முடிவு குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில் வெறும் 14% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 86 சதவீத ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் இவர்களால் எப்படி ஒரு ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.