முந்திரி பருப்பு சிறியது, வெல்லம் உருகுகிறது என்பார்கள்.... அதனால் தான் ஆயிரம் ரூபாய் அமைச்சர் விளக்கம்....!
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பொங்கல் பரிசில் கடந்த முறை போல் பொருட்கள் இல்லாததற்கு என்ன காரணம் என்ன என்பதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் சார்பில் எவ்வளவு பணம் தருவார்கள்? இலவச வேட்டி சேலையோடு, ரொக்கமாகவா அல்லது பொருளாகவா என்பது குறித்து தொடர்ந்து சிந்தித்து வந்தனர், அதற்கு தற்போது விடை கொடுத்திருக்கிறது தமிழக அரசு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை கொண்ட பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களோடு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதேபோல் திமுக பொறுப்பேற்றது வழங்கப்படுமென மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், ரொக்கப் பணத்திற்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமற்றதாக இருந்ததாகவும், வெல்லம் போன்றவை உருகிய நிலையில் இருந்ததாகவும், ஒரு பரிசு தொகுப்பில் இருந்த வெல்லத்தில் பல்லி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இதனால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் தமிழக முதல்வரே களத்தில் இறங்கி சீரான விநியோகம் நடக்கிறதா என கண்காணிக்க வேண்டியதாயிற்று.
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ரொக்க பணத்தை கூடுதலாக வழங்க வேண்டுமெனவும், பரிசுத் தொகுப்பில் கரும்பு, பனை வெல்லம் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசில் கடந்த முறை போல் பொருட்கள் இல்லாததற்கு என்ன காரணம் என்ன என்பதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,'பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது. கரும்பு கொடுத்தால் அரைக் கரும்பு கால் கரும்பு கொடுத்ததாக சொல்வார்கள். முந்திரி பருப்பு சிறியது, வெல்லம் உருகுகிறது என்றெல்லாம் புகார் சொல்வார்கள். சர்க்கரை பொங்கல் என்பதால் ஒரு கிலோ சர்க்கரையும் பச்சரிசியும் ஆயிரம் ரூபாயில் கரும்பு ஏலக்காய் என மக்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ள தமிழக முதல்வர் கூடுதலாக 1000 கொடுத்துள்ளார்' என்றார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத தமிழக மக்கள்... கடந்த அதிமுக ஆட்சியின் போது 2000 ரூபாய் கொடுத்ததற்கு 2000 வேண்டாம் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி வகையறாக்கள் கேட்டுக்கொண்டனர்.
அது தற்போது ரிப்பீட் செய்து உங்களுக்கு வந்தால் ரத்தம்... மற்றவர்களுக்கு வந்தால் தத்தளி சட்னியா...? என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.