திமுக ஆட்சி அடக்குமுறை ஆட்சியாக இருக்கிறது.; ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஹைதர் அலி பேட்டி

திமுக ஆட்சி  அடக்குமுறை ஆட்சியாக இருக்கிறது.; ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஹைதர் அலி பேட்டி

 திமுக ஆட்சி முஸ்லிம்களுக்கு அடக்குமுறை ஆட்சியாக இருக்கிறது.என்று ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஹைதர் அலி பேட்டி. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில  தலைவர் ஹைதர் அலி பேட்டி அளித்தார்.அவர் பேசும்போது கூறியதாவது:ஆயுள் தண்டனை கைதிகளை மதம், சமயம், ஜாதிய வேறுபாடுகள் இன்றி, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை தொடர்ந்து எல்லா சமூகத்தினரும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் சிறைவாசிகளையும் ஏனைய சிறைவாசிகளையும் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்வதாக சொன்னார்கள். அதற்காக 2021 டிசம்பரில் முன்னாள் நீதி அரசர் ஆத்மநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிசீலித்து அறிக்கை தருவதாக சொன்னார்கள், ஒரு வருடம் கடந்து விட்டது இன்னும் அந்த அறிக்கை தரவில்லை. தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு ஒன்றை கிடப்பில் போட வேண்டும் என்றால் விசாரணை கமிஷன் அமைத்து விடு என்று சொல்லுவார்கள். அண்ணாவின் பிறந்தநாளில் 200 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்கள். அறிவித்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டிருக்கிறார்கள்.அப்படி விடுதலை செய்தவர்களால் வீரப்பனின் குழுவில் இருந்தவர்களைகைது செய்யப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2002ல் சர்தார் என்ற முஸ்லிம் சகோதரரை வலதுசாரிகள் கொன்றார்கள். அந்த கொலை வழக்கில் சசிகுமார், கணேசன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்தார்கள். கடந்த அதிமுக எடப்பாடி ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. இதனை எடுத்து திமுக ஆட்சி வந்தது, நாங்கள் பாகுபாடு இன்றி விடுதலை செய்வோம் என்று சொன்னவர்கள் அவர்களால் விடுதலை செய்யப்படாதவர்கள் கூட வலது சாரி இயக்கத்தை சேர்ந்த கணேசன், சசிகுமார் போன்றவர்களை விடுதலை செய்திருக்கிறார்கள்' இதே தகுதி உள்ள முஸ்லிம்களை தவிர்த்து உள்ளார்கள். அந்த எடப்பாடி ஆட்சியை பிஜேபி அடிமை ஆட்சி என்று அனைவரும் விமர்சித்தோம். இன்று திமுக ஆட்சி அடிமை ஆட்சி அல்ல திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறார்கள். அடிமை ஆட்சியில் இருந்ததை விட மோசமான சூழலில் திராவிட மாடல் ஆட்சியில் முஸ்லிம்கள் கருதப்படுகிறார்கள். முஸ்லிம்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவர்கள் சந்தேகத்துடன் உரியவர்கள் என்று தெரிந்தே அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை போடுகிறார்கள். ராமநாதபுரத்தில் கூட அந்த வழக்கில் சம்பந்தமில்லாத ஒருவர் அந்த இருசக்கர வாகனத்தை பயன்படுத்தினார் என்பதற்காக கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளார்கள். :கைது செய்தது NIAஎன்ற தமிழ்நாடு காவல்துறை. திமுக ஆட்சியில் பேச்சிலே மிட்டாயும் ஆட்சியிலே அடக்குமுறை தான் உள்ளது. திமுக ஆட்சி முஸ்லிம்களுக்கு அடக்குமுறை ஆட்சியாக உள்ளது. கோயம்புத்தூரிலே கேஸ் சிலிண்டர் வெடிக்கிறது வெடிப்பதற்கு முன்பும் சரி,வெடித்த பிறகும் கூட இன்னும் ஆறு மாதத்தில் இதை போல் குண்டு வெடிக்கும் என்று அந்த கட்சியின் சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள் 2026 தேர்தலுக்கு முன்பாக வலது சாரி

 அமைப்புகளாலேயே சங்பரிவார்கள் இது போன்ற குண்டு வெடிப்புகளை அவர்கள் நடத்துவார்கள், காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற குண்டுவெடிப்புகளை தொடர்ந்து நடத்தியதால் பிஜேபி ஆட்சிக்கு வருகிறார்கள்.பிஜேபி ஆட்சியில் பெரும்பாலான குண்டுவெடிப்புகள் இல்லை என்று சொல்லுகிறார்கள், வேலூர் இப்றாகிம் குண்டு வெடிக்கும் என்கிறார்,அப்படி என்றால் ஆறு மாதத்திற்குள் குண்டு வெடிப்பதற்கான ஆயுத்த பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.என்பது தான் அர்த்தம் இவ்வாறு மாநிலத் தலைவர் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி