பயன்பாட்டில் இல்லாத சமுதாய கூடத்தை ஆய்வு செய்த மாநகர மேயர்
ஒசூர் மாநகராட்சி 45வது வார்டில் நீண்டநாட்களாக பயன்பாட்டில் இல்லாத சமுதாய கூடத்தை ஆய்வு செய்த மாநகர மேயர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 45வது வார்டிற்குட்பட்ட மத்திகிரி பகுதியில், நீண்ட நாட்களாக சமுதாய கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் பூட்டி வைத்தும், பராமரிக்கப்படாமல் இருந்ததால்
ஓசூர் மாநகர மேயருக்கு, அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் சமுதாய கூடத்தை பார்வையிட்டார்
பின்னர் சமுதாய கூடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு விரைவில் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்வதற்கான வசதிகளை செய்து தர வலியுறுத்தினார்
இந்நிகழ்வில் துணை மேயர் ஆனந்தய்யா, பொறியாளர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் கலாவதி சந்திரன், ரவி, சுமன், மனோகர், சம்பத், சீனி தினேஷ் நாகராஜ் சூரி, மணி, முத்து மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்