ஓசூர் அரசுப்பள்ளியில் நாணய கண்காட்சி

 ஓசூர் அரசுப்பள்ளியில் நாணய கண்காட்சி

*ஓசூர் அரசுப்பள்ளியில் நாணய கண்காட்சி : மாணவ மாணவிகள் சேகரித்த 150 நாடுகளின் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் காட்சிக்கு வைப்பு*

ஓசூர் சூசூவாடி பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நாணய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நாடா வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நாணய கண்காட்சியில் 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள், தற்போது புழக்கத்தில் இல்லாத, பயன்படுத்த படாத ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்திய நாட்டின் பழங்கால நாணயங்கள் மற்றும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் புதிய நாணயங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா

உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளின் நாணயங்கள் ரூபாய் நோட்டுகள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. 

இந்த நாணய கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அனைத்தும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள் சேகரித்ததாகும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  ஊரடங்கு காரணமாக நாணய கண்காட்சி நடத்தப்படாமல் இருந்துள்ளது. தற்போது இந்த பள்ளியில் பெரிய அளவில் நாணய கண்காட்சி மாணவர்கள் நடத்தினர். நாணய கண்காட்சியை பார்வையிட்ட மாநகர மேயர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பள்ளி மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

Hosur Reporter. E. V. Palaniyappan

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்