தீபாவளி பண்டிகைக்கு நீண்ட விடுமுறை,,,,,?!
நாடு முழுவதும் இன்னும் 5 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகைக்கு வட இந்திய மாநிலங்களில் நீண்ட விடுமுறை விட்டுள்ளனர். இங்கு தண்டிராஸ், சோட்டி தீபாவளி, மெயின் தீபாவளி, கோவர்தன் பூஜை, பாய் தூஜ் ஆகிய பண்டிகைகள் கொண்டாடுகின்றனர். இதற்காக அக்டோபர் 18 முதல் 23 வரை 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநிலத்திற்கு ஏற்ப விடுமுறை நாட்களும், தேதியும் மாறுபட்டுள்ளது.

தமிழ்நாட்டில்
எடுத்துக் கொண்டால் அக்டோபர் 18 சனி, அக்டோபர் 19 ஞாயிறு, அக்டோபர் 20
திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில்
தீபாவளி சிறப்பு விடுமுறை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது வெளியூர்
சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்புபவர்கள் வசதிக்காக அக்டோபர் 21 செவ்வாய்
அன்று விடுமுறை அறிவிக்கக்கூடும் என்கின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வ
அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
கர்நாடகா
மாநிலத்தில் சமூக பொருளாதார சாதிய கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருவதால்
பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல்
18ஆம் தேதி விடுமுறை என்று கூறியுள்ளனர். இதுதவிர அக்டோபர் 20 தீபாவளி
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் உள்ள 19ஆம் தேதி ஞாயிறு என்பதால்
தொடர்ச்சியாக 13 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
கவனிக்கத்தக்கது.
பிகார் தேர்தல் ஏற்பாடுகள் - விடுமுறை கொண்டாட்டம்

பிகார் மாநிலத்தில்
அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 6, 11 என இரண்டு
கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து
வருகின்றன. இவ்வாறு அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் தீபாவளி பண்டிகைக்கு
தயாராகி வருகின்றனர். அக்டோபர் 20 முதல் 29ஆம் தேதி வரை தீபாவளி, சாத் பூஜை
கொண்டாட்டங்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச தீபாவளி பண்டிகை - 6 நாட்கள் விடுமுறை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அக்டோபர் 20 திங்கள் முதல் அக்டோபர் 23 வியாழன் வரை தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வரும் சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் வருவதால் பள்ளி மாணவர்களுக்கு
தொடர்ச்சியாக 6 நாட்கள் கிடைத்திருக்கிறது.
ராஜஸ்தான் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் நீண்ட விடுமுறைக்கு தயாராகியுள்ளனர். இங்கு விடுமுறை என்பது அக்டோபர் 13ஆம் தேதியே தொடங்கிவிட்டது. தற்போது விடுமுறை கொண்டாட்டத்தில் தான் இருக்கின்றனர். தீபாவளியை தொடர்ந்து 22ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கிறது. மொத்தமாக பார்த்தால் 12 நாட்கள் விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்குவங்க தீபாவளி விடுமுறை தேதி

மேற்குவங்க மாநிலத்தில் காளி பூஜை, தீபாவளி, பாய் தூஜ் உள்ளிட்ட பண்டிகைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதற்காக அக்டோபர் 20 முதல் 23ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக வார விடுமுறை வருவதால் 6 நாட்கள் தொடர் கொண்டாட்டத்திற்கு பள்ளி மாணவர்கள் தயாராகியுள்ளனர்.